போட்டியில் வென்றும் பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதல் பேட் செய்த மும்பை 235 ரன்களை எடுத்தது. மும்பை அணிக்காக வானவேடிக்கை காட்டிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதேபோல், சூர்ய குமார் யாதவ் 82 (40) விளாசி அந்த அணியின் ரசிகர்களை மகிழ்வித்தனர். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையையும் விதைத்தனர்.

236 என்ற இமாலய இலக்கை விரட்டியது ஹைதராபாத். ஜேசன் ராய் – அபிஷேக் ஷர்மா முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களை எடுத்திருந்தனர். ராய் ஆறாவது ஓவரில் 21 பந்துகளில் 34 ரன்களை எடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் மணீஷ் பாண்டே களத்திற்கு வந்தார்.

முகமது நபி, அப்துல் சமாத் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். பின்னர் வந்த பிரியம் கர்குடன் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் மணீஷ் பாண்டே. கர்க் 29 ரன்களில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், சாஹா என மூவரும் அவுட்டாகினர்.

போல்ட், பும்ரா, பியூஷ் சாவ்லா, குல்டர் நைல், ஜேம்ஸ் நீஷம் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மணீஷ் பாண்டே 41 பந்துகளில் 69 ரன்களை எடுத்திருந்தார்.

முடிவில் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இருந்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளது மும்பை. கொல்கத்தா, நான்காவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. எலிமினேட்டரில் பெங்களூர் அணியை கொல்கத்தா சந்திக்கிறது. டாப் இரண்டு இடங்களை பிடித்த சென்னை – டெல்லி அணிகளும் பிளே ஆப் சுற்றில் மோதவுள்ளன.

லீக் போட்டி முடிவுகள்:

டெல்லி : 10 வெற்றி, 4 தோல்வி

சென்னை: 9 வெற்றி, 5 தோல்வி

பெங்களூர்: 9 வெற்றி, 5 தோல்வி

கொல்கத்தா: 7 வெற்றி, 7 தோல்வி

மும்பை : 7 வெற்றி, 7 தோல்வி

பஞ்சாப் : 6 வெற்றி, 8 தோல்வி

ராஜஸ்தான் : 5 வெற்றி, 9 தோல்வி

ஹைதராபாத்: 3 வெற்றி, 11 தோல்வி

பிளே ஆஃப் போட்டிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் : அக். 10, இரவு 7.30 மணி

பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : அக். 11, இரவு 7.30 மணிக்கு

இரண்டாவது எலிமினேட்டர்: அக். 13

இறுதிப் போட்டி : அக். 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *