ஒற்றை வார்த்தையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை பதிவிட்ட ஒரு நாள் கழித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் 23வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது நட்பு நாடுகளிடமிருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பின்னர் அவர் தனது வார்த்தைகளை சரிசெய்து, தவறு செய்ததாக மன்னிப்பு கேட்டார்.

அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதலைத் தடுக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் தவறிவிட்டதாக நெதன்யாஹு சனிக்கிழமை இரவு தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டினார். ஆனால், தனது கருத்துக்கு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னிப்பு கேட்டார்.

Israeli Prime Minister Benjamin Netanyahu apologised, Benjamin Netanyahu controversial tweet

நெதன்யாஹு தனது பதிவை அகற்றிவிட்டு, ஒரு புதிய பதிவில் “நான் தவறு செய்தேன்” என்று எழுதினார். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு, தான் அவ்வாறு சொல்லியிருக்கக்கூடாது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், (IDF) தலைமைத் தளபதிகள், தளபதிகள் மற்றும் படையினருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *