வாகன விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

எகிப்தில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே 131 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Cairo-Alexandria வீதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேருந்து மற்றும் கார்கள் மோதி தீப்பற்றி எரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தநாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் al-Natrun உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Khaled Abdel Ghaffar தெரிவித்துள்ளார்.

எகிப்தில் வாகன விபத்து என்பது சகஜமானதொரு விடயமாக பார்க்கப்படுகிறது.

வீதிகள் மோசமான நிலையில் காணப்படுதல் மற்றும் வீதி விதிமுறைகள் பின்பற்றப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *