மோட்டோரோலா அறிமுகம் செய்த அபூர்வ கையடக்க தொலைபேசி!

 

மோட்டோரோலா சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள போனை நீங்கள் கையில் வளைத்து வாட்ச் போல கட்டிக் கொள்ளலாம்.

தற்போது மடிக்கக் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களின் அறிமுகம் மெல்ல மெல்ல வேகமெடுத்து வரும் நிலையில், மோட்டோரோலா நிறுவனம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் போன் அந்த நிறுவனத்தின் கம்பேக்காக இருக்கும் எனக் கூறலாம்.

சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான லெனோவோ டெக் வோர்ல்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது POLED டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதை அழகாக மடித்து வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளலாம். இது தவிர மேலும் பல நிலைகளில் இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை மடிக்காமல் நேராக வைத்து ஸ்மார்ட்போன் போலவும் பயன்படுத்தலாம். நேராக இருக்கும் போது 6.9 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை மடிக்கும்போது அது 4.6 இன்ச் அளவாக மாறிவிடுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ள இந்த கான்செப்ட் ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. இதற்கான அறிமுக விழா சர்வதேச மொபைல் கான்ஃபரன்ஸ் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் இதே போன்று சுருட்டக்கூடிய ஸ்மார்ட்போனை விவோ, HCL போன்ற நிறுவனங்களும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் அறிமுகம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பார்ப்பதற்கே முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் இந்த ஸ்மார்ட் போனை வாங்குவதற்காக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். இது அறிமுகம் செய்யப்பட்டால், மிகப்பெரிய அளவில் மக்களால் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *