பணம் கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இ மெயில் மூலம் பணம் கேட்டு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வரும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 27 -ம் திகதி சதாப் கான் என பெயரிட்டு மெயில் ஒன்று வந்துள்ளது.

முகேஷ் அம்பானி / mukesh ambani

அதில், “20 கோடி ரூபாய் எங்களுக்கு நீங்கள் தரவில்லையென்றால் உங்களை கொலை செய்வோம். எங்களிடம் இந்தியாவின் சிறந்த துப்பாக்கிச் சுடுபவர்கள் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி, மும்பை காம்தேவி காவல் நிலையத்தில் பிரிவு 387, 506 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல, கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பொலிசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *