பக்கவாத நோயாளர்கள் அதிகரிப்பு

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய பக்கவாத சங்கம் தெரிவித்துள்ளது.

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்படவுள்ள பக்கவாத தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பக்கவாத நோயினால் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் 25 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகளாவிய ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாத ணியினால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழப்பவர்களில் 51 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 800 பரிசோதனை நிலையங்கள் காணப்படும் நிலையில், இதன் மூலம் நபர் ஒருவர் தமது ஆரோக்கியத்தினை பரிசோதனைக்கு உட்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *