World

சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் : எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்

தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் தீவில் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவை மனிதர்களுக்கு தொற்றும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றம்சாட்டின.

மேலும் பயோ வாரை (Bio war) தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வின்போது கொரேனாா வைரஸ் வெளிப்பட்டு உலகம் முழுவதும் பரவியதாக சில நாட்டு தலைவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

தெற்கு சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் : எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள் | 8 Deadly Viruses Found In China

ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading