இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

பெங்களூருவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Ben Stokes அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும் Jonny Bairstow 30 ஓட்டங்களையும் Dawid Malan 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 3 விக்கெட்டுக்களையும் Kasun Rajitha மற்றும் Angelo Mathews ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் Sadeera Samarawickramaவும் ஆட்டமிழக்காமல்  65 ஓட்டங்களை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *