ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில்

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 17-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்நாத் பிரசாரத்தை எக்ஸ் தளம் வாயிலாக தொடங்கியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் : இந்திய தேர்தலில் வாக்குறுதி | Sita Temple In Sri Lanka If Comes To Power

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் உள்ள இலங்கையில் சீதை கோவில் கட்டும் திட்டம் தொடங்கப்படும், மேலும் கோவில் அர்ச்சகர்களின் உதவித்தொகை உயர்வு, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கோவில் சொத்துகள் பராமரிப்பு” ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *