ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று (21) கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாடு முழு நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், நாடு வங்குரோத்து நிலை ஏற்பட்டதன் பின்னரானது என்றும் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டு அவர்,

முழு உலகத்தின் ஆதரவுடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி பாடுபடுவார்.

சீன விஜயத்தின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மக்கள் மத்தியில் உரையாற்றி நாட்டுக்கு முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கையை உருவாக்க வழி காட்டியுள்ளதுடன், புதிய தொழில்நுட்பத்துடன் தேசிய மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு முழு நாட்டினதும் ஆதரவைப் பெறக்கூடிய கட்சி அமைப்பை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

அந்த பாதையில் பயணிக்க வேண்டும் என அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

மேலும், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், கட்சியின் அரசியலமைப்பை அங்கீகரிக்கக் கூடியவர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *