இஸ்ரேலின் மற்றுமொரு திடீர் கோர தாக்குதல்: மரண ஓலத்தில் காசா

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் வளாகத்தில் “பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்” ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பலஸ்தீன பகுதியில் போர் மூண்டதால், பல காசாவாசிகள் தஞ்சம் புகுந்திருந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் உள்ள இலக்கை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் மற்றுமொரு திடீர் கோர தாக்குதல்: மரண ஓலத்தில் காசா | Hamas Reports Killed Gaza Church Israeli Attack

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *