நிலத்தின் கீழ் இருந்து வரும் மர்ம சத்தம் – காரணத்தை கண்டறிந்த பேராசிரியர்

கொத்மலை, ஹதுனுவெவ, வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து வெளிவரும் மர்ம ஒலி தொடர்பான ஆய்வு இன்று (19) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேராதனை புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் தலைமையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக கொத்மலை, வேத்தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இருந்து பெரும் சத்தம் எழுவது தொடர்பில் ஆராய்ந்து விரைவான தீர்வை வழங்குமாறு மக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சர்ச்சைக்கு வழிவகுத்த பிரதேசத்தின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர்வாசிகளுக்கு நிலைமைகள் மற்றும் ஒலியின் காரணம் குறித்து தெரிவிக்கும் பணியில் பேராசிரியர் அதுல சேனாரத்ன ஈடுபட்டுள்ளார்.

குறித்த பிரதேசம் முன்னர் ஏரி இருந்த பிரதேசமாக இருந்தமையினால், அப்பகுதியின் கீழ் நீர் கசிவு காணப்படுவதாகவும், தற்போது அது பாரதூரமான சூழ்நிலை இல்லை எனவும் கூறியிருந்தார்.

எனினும், எதிர்காலத்தில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நிலத்தை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்து, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *