காஸா அகதிகளை ஏற்றுக்கொள்ள தயார் ஸ்காட்லாந்து அறிவிப்பு!

இஸ்ரேல் தரைவழிப் போர் காரணமாக வெளியேறி வரும் காஸா மக்களுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்காட்லாந்து தயாராக உள்ளது.

சிரியா, உக்ரைன் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களை ஸ்காட்லாந்து வரவேற்றுள்ளது. இப்போது அதன் தொடர்ச்சியாக காஸா மக்களையும் ஏற்றுக்கொள்ள ஸ்கொட்லாந்து தயாராக உள்ளது.

இதுகுறித்து ஸ்கொட்லாந்து முதல் மந்திரி ஹம்சா யூசுப் (Humza Yousaf) கூறுகையில், ‘காஸா தாக்குதலில் பலியானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து இருக்கும்’ என்றும் காசாவில் இடம்பெயர்ந்த ஒரு மில்லியன் மக்களுக்காக சர்வதேச அகதிகள் திட்டத்தை தொடங்க ஹம்சா யூசுப் சர்வதேச சமூகத்தையும் அழைத்தார். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இங்கிலாந்து அரசையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Scotland, Scotland welcomes Gaza Refugees, United Kingdom, Scotland

“காஸாவில் காயமடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என் மைத்துனர் காஸாவில் ஒரு மருத்துவர். காஸாவில் நடந்த படுகொலைகள் குறித்து தொலைபேசியில் பேசுகிறார்.

மருத்துவமனைகளில் தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. யாருக்கு சிகிச்சை அளிப்பது, யாரை இறக்க அனுமதிப்பது என்ற கடினமான முடிவை செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர். அதை அனுமதிக்கக் கூடாது” என்று ஹம்சா யூசுப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *