இந்தியா அணி வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் Litton Das அதிகபடியாக 66 ஓட்டங்களையும், Tanzid Hasan 51 ஓட்டங்களையும் Mahmudullah 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah, Mohammed Siraj, Ravindra Jadeja ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அணித்தலைவர் ரோஹித் சர்மா 48 ஓட்டங்களையும் சுப்மன் கில் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *