காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்:

இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக கனேடிய இளைஞர் ஒருவர் உயிரை விட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் இந்த இளைஞர் என்றே அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்: தாயார் வெளியிட்ட நொறுங்கவைக்கும் தகவல் | Canadian Dead Hamas Attack Threw Himself Grenade

அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளான்.

ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார் Netta Epstein. இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

Netta Epstein இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் ராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.

கொல்லப்பட்ட 70 பேர்களில்

kibbutz பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள் எனக் கூறும் Netta Epstein-ன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்: தாயார் வெளியிட்ட நொறுங்கவைக்கும் தகவல் | Canadian Dead Hamas Attack Threw Himself Grenade

அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவயிடத்தில் இருந்ததாகவும், அனால் இன்னொரு பகுதியில் ஒளிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *