இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஹமாஸ்: பதற்றத்தில் மக்கள்

பத்தாவது நாளாக தொடரும் இஸ்ரேல் பலஸ்தீன் இடையேயான போர் வலுவடைந்து செல்கின்ற நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்

இந்த நிலையில், இன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஹமாஸ்: பதற்றத்தில் மக்கள் | Israel Hamas War Live Update Rocket Attack Israel

இந்த தாக்குதலை தொடர்ந்து எழுந்த மிகப்பெரும் சத்தத்தால் டெல் அவிவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *