ஒரே நாளில் இந்திய – யாழ்ப்பாணம் படகுச் சேவை இரத்து

தமிழகத்தையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (சனிக்கிழமை) தொடங்கப்பட்ட படகுச் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாள் முழுவதும் ,ரத்து செய்யப்பட்டது.

UNI செய்தி நிறுவனத்தின்படி, இன்று 6-7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், படகு சேவை இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை படகு சேவை மீண்டும் தொடங்கும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி UNI செய்தி வெளியிட்டுள்ளது.

Shipping Corporation of India SCI ஆல் இயக்கப்படும் அதிவேக படகு 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்பதுடன், கடல் சூழ்நிலையைப் பொறுத்து நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே சுமார் 60 nm (110 Km) தூரத்தை சுமார் 3.5 மணி நேரத்தில் கடக்கும்.

அதன் தொடக்க பயணத்தில், செரியபாணி என்ற கப்பல் 50 பயணிகளுடன் இலங்கைக்கு பயணித்தது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான படகுச் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, பயணிகளை இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர், அதேபோல் சனிக்கிழமை மாலை, தமிழக அரசு அதிகாரிகள் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகளை வரவேற்றனர்.

இந்நிலையில், “முன்பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால், இன்றைய படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நாளை சேவைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *