அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு : ஜோ பைடன்

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெிவித்துள்ளார்.

பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர்.

பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது.

அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு : ஜோ பைடன் | Hamas Is More Dangerous Joe Biden

பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

அத்துடன், 27 அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *