லியோ படத்தை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்

18 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் லியோ படத்தை பார்க்க முடியும் என்று அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படம் குறித்த முதல் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

லியோ படத்தை யூகேவில் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

இந்நிலையில், லியோ குறித்து அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் வெளியிட்ட கருத்து ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதில், LEO படத்தில் வன்முறை காட்சிகள், கொடூரமான காட்சிகள் அதிகம் உள்ளது.

லியோ படத்தை 15 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கலாம் என இலக்கு இருந்தாலும், 18 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை பார்க்க முடியும்.

லியோ படத்தில் பல இடங்களில் கொடூர காட்சிகள் உள்ளன.

அவற்றை அகற்றினால், அது படத்தை பாதித்துவிடும் என்பதால், அந்த காட்சி அப்படியே படத்தில் உள்ளது.

இதனால், 4 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலர் தளபதி விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் படத்தில் உள்ளதால், இப்படத்தை அவர்களால் பார்க்க முடியாது, குழந்தைகளோடு லியோ படத்தை தியேட்டரில் பார்க்க நினைத்த பெற்றோர்களிடம், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.

மேலும், LEO திரைப்படம் 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் இதில், தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த படமாக உள்ளது.

எனவே 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை பார்க்க முடியும் என என அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *