“தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும்”

காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கக்கொடிகளை ஏந்தி காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு எனக் கண்டித்துள்ளார்.

கொழும்பு சிவில் சமூகத்தின் முக்கிய பிரமுகரான ஸ்வஸ்திகா அருலிங்கம், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தனது கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை “தமிழ் சமூகத்திற்குள் புற்றுநோய்” எனவும் அவர் அழைத்தார்.

ஈழப்போராட்டம் தொடர்பாக சிங்களத்தில் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் பற்றி விவாதிக்க, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஆரம்பமாக மாகாண சபைகளுக்கு ஆதரவளிக்கும் நவ சமசமாஜக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை உருவாக்கிய சிறிதுங்க ஜயசூரியவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் விடுதலைப் புலிகள் மீதான விமர்சனத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

“இது மிகவும் தனிப்பட்ட கருத்தாகும். ஏனெனில் தமிழ் பேசும் பலர் எனது கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகள் ஒரு பாசிச அமைப்பு என நான் நினைக்கின்றேன்.

தமிழ் சமூகத்தினுள் உருவாகியுள்ள புற்றுநோய் எனவும் கருதுகின்றேன். போரின் முடிவில் அரசியல் ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

எனவே முள்ளிவாய்க்கால் படுகொலையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இறந்தமை இவர்களின் பிடிவாத அரசியலின் விலைவே.

எனது விடுதலைப் புலிகள் பற்றிய தனிப்பட்ட கருத்து. பல எதிரிகளை கொன்று, அவர்களுக்கு உடன்படாத பல தமிழர்களை கொன்று, சிறுவர்களை போருக்கு சேர்த்து, தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு வாய்ப்பளிக்காத கொடூர பாசிச அமைப்பாகும்.

ஏனெனின் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தவர்களில் பலர் நீடிக்க முடியாத யுத்தத்திற்காக விடுதலைப் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள்.

இதுவே, விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்த எனது தனிப்பிட்ட கருத்தாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *