மிக வயதான ஸ்கை டைவர் உலக சாதனை படைத்த பெண் உயிரிழப்பு

மிக வயதான ஸ்கை டைவர் (Sky Diver) என உலக சாதனை படைத்த 104 வயதான அமெரிக்க பெண் Dorothy Hoffner சிகாகோவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச அளவில் ஸ்கை டைவிங் திறமைக்காக அறியப்பட்ட இவர், கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி சிகாகோ விமான நிலையத்தில் மிக வயதான ஸ்கை டைவர் (Sky Diver) என்ற கின்னஸ் சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன், 103 வயதான ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவரே இந்த சாதனை படைத்திருந்தார்.

அமேரிக்காவைச் சேர்ந்த Dorothy Hoffner தனது ஸ்கைடைவ் அனுபவத்தை அமைதியாகவும் வேடிக்கையான அனுபவமாகவும் மேற்கொண்டார்.

மேலும், அவரது இந்த அனுபவம் தொடர்பில் ஊடகங்கள் முன் கருத்து தெரிவித்த Dorothy Hoffner,

“நீங்கள் செய்யும் செயல்களுக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்?

எனக்கு 104 வயது. அதனால் பிரச்சினை இல்லை…’’ என தெரிவித்திருந்தார்.

அந்த சாதனை புரிந்து ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Dorothy Hoffner தனது 100வது பிறந்தநாளில் தனது முதல் ஸ்கைடைவ் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *