128 ஆண்டுகளுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட திருடன்

பென்சில்வேனியாவில் ஸ்டோன்மேன் வில்லி என பிரபலமாக அழைக்கப்பட்ட பூதவுடல் அடையாளம் கண்டுபிடிக்கபட்டதையடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, பென்சில்வேனியாவில் காணப்படும் பிரபல மலர்சாலையொன்றில் 128 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்து.

மம்மியாக அடக்கம் செய்யப்பட்ட குறித்த நபர், இதுவரை ஸ்டோன்மேன் வில்லி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அவரது உடலின் தோற்றமே இதற்குக் காரணம் என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1895ஆம் ஆண்டு சிறையில் இறந்த திருடர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மலர் சாலை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மதுபானத்திற்கு அடிமையான நிலையில், அவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி சிறுநீரக பாதிப்பினால் சிறையில் உயிரிழந்துள்ளார்.

தனது 37வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது தந்தை அயர்லாந்தில் பணக்காரர் என்றும், தனது தந்தையை சங்கடப்படுத்த விரும்பாததால், அதிகாரிகளுக்கு போலி பெயரை சூட்டியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

video

அவரது உண்மையான பெயர் ஜேம்ஸ் மர்பி என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவரது உடலை அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு நூற்றாண்டுக்கும் அதிக காலம் காணப்பட்ட ஜேம்ஸ் மர்பியின் மம்மி பென்சில்வேனியாவின் ரீடிங்கிலுள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

மேல தாளங்கள் கொண்டு எடுத்துசெல்லப்பட்ட வில்லியின் இறுதி ஊர்வலத்தை அனைவரும் கண்டு கழித்தனர்.

கல்லறையில் ‘ஸ்டோன்மேன் வில்லி’ என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு அதன் கீழே அவரது உண்மையான பெயர் சிறிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் அவரது கல்லறையின் புகைப்படங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *