10 வருடங்கள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியுள்ள போதிலும் இறக்குமதிக்கு வணிக வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை திறக்க முடியவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக வாகனங்கள்,நிர்மாணத்துறை சம்பந்தமான வாகனங்கள், இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

எனினும் அதற்கான கடன் கடிதங்களை வெளியிட வேண்டாம் என இறக்குமதி கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஆரம்பத்தில் ஐந்தாண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது எனவும் எனினும் தற்போது 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது எனவும் அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் மொரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இந்த பழமையான வாகனங்களின் விலை குறைவு என்றாலும் அவை 10 லட்சம் கிலோ மீட்டருக்கும் மேல் ஓடியுள்ளதால், பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *