இலங்கையில் தினமும் 50 பேரின் உயிரை பறிக்கும் மதுபானம்!

 

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *