லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

 

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி,

⭕12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய விலை 3470 ரூபாய் ஆகும்.

⭕5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில்,

புதிய விலை 1393 ரூபாவாகும்.

⭕2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *