குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணத்தை செலுத்துகிறார் சனத்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு முன்வந்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த மின்சார கட்டணத்தை சனத் நிசாந்த செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், சனத் நிஷாந்த அமைப்பினால் இந்த மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களது மின்சார பட்டியலின் புகைப்படம் ஒன்றை 0777449492 என்ற whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க அல்லது 032 2259130 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கட்டண விபரங்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் 26 இலட்சம் ரூபா மின்சார கட்டண நிலுவையை சனத் நிசாந்த அண்மையில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *