இலங்கை அணிக்கு கிடைத்த வெண்கலப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தர 400 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை ஆண் அணியினர் 3.02.55 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர்.

இதேவேளை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணியினர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை பெண் அணியினர் 3:30:88 நிமிடங்களை எடுத்துள்ளனர். இது ஒரு புதிய இலங்கை சாதனையாக கருதப்பட்டுகிறது.

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *