கொரோனா அச்சத்திற்கு இடையே ஷிகெல்லா நோயால் ஒருவர் மரணம்!

கேரளாவில் கொரோனா அச்சத்திற்கு இடையே, ‘ஷிகெல்லா’ என்ற நோய் பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன், ‘நிபா’  வைரஸ் காய்ச்சல் பரவியது.  கோழிக்கோடு மாவட்டத்தின்தான் இந்ேநாய் பரவ ஆரம்பித்தது.  ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிபா காய்ச்சல் ஏற்பட்டது. இதில் 30க்கும்  மேற்பட்டடோர் இறந்தனர். கேரள அரசின் தீவிர நடவடிக்ைகயால் இந்த  நோய் கட்டுப்படுத்தப்பட்டது. தற்ேபாது, கேரளாவில்  கொரோனா ெதாற்று  அதிகம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ேகாழிக்ேகாடு  மாவட்டத்தில் உள்ள முண்டிக்கல்தாழம், செலவூர் உட்பட சில பகுதிகளில், ‘ஷிகெல்லா’ என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. கடுமையான காய்ச்சல்,  வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பேதி போன்றவை இந்த நோயின் முக்கிய  அறிகுறிகளாக உள்ளன.

தூய்மையற்ற குடிநீர், சுகாதாரமற்ற உணவால் இது பரவுகிறது. ஷிகெல்லா பாதிக்கப்பட்டவர்களுடன் ெதாடர்பில்  இருப்பவர்களுக்கு இந்நோய் ெதாற்றும். கோழிக்கோட்டில் தற்போது 25க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்ற  ஒருவர் பலியானார். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்ைககளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *