கூகுளுக்கு ரூ.7,000 கோடி அபராதம்

பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (Location) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுளுக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம்.

அதற்கு பயனர்கள் இருப்பிட விபரம் உள்ள அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும்.

இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும்.

Google
Google

இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் இருப்பிட விபரத்தை ஆஃப் செய்திருப்பார்கள்.

இப்படி ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சேகரிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லொகேஷனை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சார்ந்த தரவுகளை கூகுள் சேகரித்ததாக சொல்லி அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

இது உறுதி செய்யப்பட்ட காரணத்தால் கூகுளுக்கு 7000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கூகுள் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அபராதத்தை செலுத்த ஒப்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *