சுற்றுலாப்பயணிகள் வருகையில் இலங்கைக்கு பின்னடைவு

இந்த மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 27 நாட்களிற்குள் சுமார் 80% ஆன இலக்கு எட்டப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் தற்காலிகமான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் படி ஓகஸ்ட் மாதத்தின் முதல் 27 நாட்களில், இலங்கையில் மொத்தம் 123,285 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு சராசரியாக 4,566 பேர் ஆக சுற்றுலாப்பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது, இந்த கணக்கெடுப்பின் படி இந்த மாத முடிவில் 142,000-145,000 வரையான சுற்றுலாப்பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இருக்க எதிர்வரும் நாட்களில் இந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனில் இந்த மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 149,075 சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையை அடைவது சாத்தியமற்றதொன்றாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் 35,775 ஆக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை, ஓகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தில் (22-27) 20,273 ஆக குறைவடைந்துள்ளது.
பாடசாலைகளுக்கான கோடை விடுமுறை முடிவடைவது குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் சுற்றுலா வருகையை குறைத்துள்ளது இதுவும் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் படி 26,227 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்து அதிக சுற்றுலாப்பயணிகளை உள்வாங்கிய நாடு என்ற பெயரில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த வரிசையில் இரண்டாம் இடத்தினை லண்டனும், முன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜேர்மன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் முக்கிய இடத்தினை வகிக்கிறமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *