முதல் முறையாக பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிப்பு

 

உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது பிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து “நீண்ட சரம் போன்ற பொருள்” வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு.

இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர்.

விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்களின் ஆபத்து அதிகரித்திருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“அந்தத் தருணத்தில் அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அதுவரை காணாத வகையில் அதிர்ச்சியடைந்தனர். [அந்த அறுவைசிகிச்சை நிபுணர்] ஒரு அசாதாரணமாகத் தெரிந்த ஒன்றை எடுக்க முயன்றார். படிப்படியாக அது நெளிவது தெரிந்தது. கடைசியில் அது 8 சென்டி மீட்டர் நீளமுள்ள வெளிர் சிவப்பு புழுவாக எனத் தெரிந்தது,” என்று கான்பெரா மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறினார்.

அந்த பெண் வசித்த இடத்தில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் ஒரு வகையான நாட்டுப்புற புல் போன்றவற்றை சேகரிக்கும்போது அந்தப் பெண்ணுக்குள் இந்தப் புழு புகுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

” இது ஒரு மனிதர்களில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு புதிய வகை தொற்று ஆகும்.”

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி புழு கார்பெட் மலைப்பாம்புகளில் பொதுவாக இருக்கக் கூடியது. இவை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் விஷமற்ற பாம்புகளாகும்.

அந்த பெண் வசித்த இடத்தில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் ஒரு வகையான நாட்டுப்புற புல் போன்றவற்றை சேகரிக்கும்போது அந்தப் பெண்ணுக்குள் இந்தப் புழு புகுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தொற்றுநோய்கள் பற்றிய இதழில் எழுதியுள்ள ஒட்டுண்ணி மருத்துவத்துவ நிபுணரான மெஹ்ராப் ஹொசைன், ”மலைப்பாம்பு மலம் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் போன்றவை இருந்த தீவனச் செடிகளை சமையலுக்குப் பயன்படுத்தியபோது அந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று வலி, இருமல், இரவில் வியர்த்தல், வயிற்றுப்போக்கு போன்ற அசாதாரண அறிகுறிகள் தொடங்கின. மறதி அதிகரித்து மன அழுத்தம் மோசமானது. மோசமாக்கியது.

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி புழு மலைப்பாம்புகளில் பொதுவாக இருக்கக் கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட பெண் 2021 ஜனவரி பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஸ்கேன் செய்ததில் “மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்” கண்டறியப்பட்டது. ஜூன் 2022 இல் அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அந்தப் பெண்ணின் நோய்க்கான காரணம் தெரியவந்தது.

மிக மோசமான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பெண் நன்றாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“ஓபிடாஸ்காரிஸ் புழுக்கள் மூளையில் இருப்பது இதற்கு முன் ஒருபோதும் கண்டறியப்பட்டதில்லை” என்று டாக்டர் ஹொசைன் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனுக்குள் மூன்றாம் கட்ட லார்வா அளவுக்கு ஒட்டுண்ணி வளர்ந்திருப்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு முந்தைய சோதனை ஆய்வுகள் செம்மறி ஆடுகள், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வளர்ப்பு விலங்குகளில் இந்த அளவுக்கு லார்வா வளர்ச்சி காணப்படவில்லை.”

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) மருத்துவ இணைப் பேராசிரியராகவும் இருக்கும் சேனநாயக்க பிபிசியிடம் பேசும்போது, “இது ஓர் எச்சரிக்கை” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *