நகை அடவு வைத்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது.
அடமானம் தொடர்பான நெருக்கடி குறித்து வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் முறைபாடுகள் அதற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன.
குருநாகல், கம்பஹா, காலி மாவட்டங்களில் நிவாரணம் வழங்கும் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 697 911 அல்லது 0112 697 910 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த ஆண்டில் மட்டும் இவ்வாறான சிரமங்களை எதிர்நோக்கிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்ததாக சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *