எந்த மின்சார வாகனமாக இருந்தாலும் 15-நிமிட சார்ஜிங் போதும்!

 

ஆற்றல் தொழிற்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான எக்ஸ்போனெண்ட் எனர்ஜி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புதிய நீர்-சார்ந்த தொழிற்நுட்பத்தை வெளியீடு செய்துள்ளது. எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனத்தை பற்றியும், அதன் புதிய தொழிற்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்போனெண்ட் எனர்ஜி (Exponent Energy), பெங்களூரை சேர்ந்த எனர்ஜி டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம். வழக்கமான எரிபொருள் என்ஜின் வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக நம்பும் எக்ஸ்போனெண்ட் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்கள் துறையை 100% வளர்ச்சி அடைய செய்ய ஆற்றல் சார்ந்துள்ள பிரச்சனைகளை எளிமையானதாக மாற்ற வேண்டும் என கூறுகிறது.

இந்த நிலையில், பெங்களூரில் நடைபெற்ற ஃபைனல் லிங்க் என்ற நிகழ்ச்சியில் நீர்-சார்ந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை எக்ஸ்போனெண்ட் எனர்ஜி வெளியீடு செய்துள்ளது. ஆன்-போர்டு அம்சமாக இல்லாமல் ஆஃப்-போர்டு அம்சமாக இந்த தொழிற்நுட்பம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விருப்பப்படும் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை வாங்கிய பின் தனியாக இதனை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

பேட்டரி உடன் இணைந்து செயல்படும் இந்த தொழிற்நுட்பம் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகளை 30% குறைவானதாக மாற்றும் என எக்ஸ்போனெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு ஆகும் செலவையும் 33% வரையில் குறைக்க முடியும் என எக்ஸ்போனெண்ட் நம்புகிறது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் உதவியால் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை வெறும் 15 நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என கூறுகிறது. இந்த 15-நிமிட சார்ஜிங் நேரத்தை நிஜ உலகில் பெற முடியுமாம். இந்த விரைவான 15-நிமிட சார்ஜிங்கை கடந்த 3 மாதங்களில் சுமார் 25,000க்கும் அதிகமான முறை எக்ஸ்போனெண்ட் செய்து காட்டியுள்ளது.

இதற்காக, பெங்களூர் சாலைகளில் 200க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் 10 இலட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு இயக்கப்பட்டு உள்ளன. தற்போதைக்கு பெங்களூரில் மட்டுமே செயல்பட்டுவரும் எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனம் விரைவில் சென்னை உள்பட டெல்லி என்சிஆர், மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் என மேலும் 5 நகரங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த மார்க்கெட் விரிவாக்க பணிகளை 2025 மார்ச் மாதத்திற்கு உள்ளாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ள எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாகிகள், 1,000 இ-பம்புகளை நிறுவி, 2025ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 25,000 எலக்ட்ரிக் வாகனங்களை தங்களது நிறுவனத்தின் இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியவைகளாக மாற்ற மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *