சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிடும் போது அவதானமாக செயற்பட வேண்டும்!

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடும்போது அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தப்படும் காட்சிகள் உள்ளடங்கிய பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பெண்கள் தாக்கப்படுவது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோக்கள்வெளியாகியுள்ளன. அதனை வெளியிட்ட நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மேலும் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விடயங்களை குறிப்பாக சட்டத்தால் தடை செய்யப்பட்ட விடயங்களை விளம்பரப்படுத்துதல், மேலும் சமூக வலைத்தளங்களில் மூலம் இவற்றை பகிரும் போது அவர் நிச்சயமாக பாரியதொருகுற்றத்தை மேற்கொள்கிறார். நவகமுவ சம்பவத்திலும் குறித்த நபரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *