A R ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்பு தர மறுத்ததாக பிரபல பாடகி தெரிவிப்பு!

ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை பாடியதால் இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டதாக பாடகி மின்மினி தெரிவித்துள்ளார்.

1992ஆம் ஆண்டு வெளியான ‘மீரா’ படத்தின் மூலம் இளையராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி மின்மினி. அதன் பிறகு ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாசறு பொன்னே வருக’ என்ற பாடலை பாடகி ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்து பாடியிருந்தார். 1992ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த பாடலுக்குப் பிறகு இளையராஜாவிடம் பணிபுரியும் வாய்ப்பை இழந்துவிட்டதாக பாடகி மின்மினி சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு பாடல் பதிவுக்காக ஸ்டுடியோவுக்கு வந்த தன்னை இளையராஜா, ‘அவர் வேறு ஒரு இடத்தில் பாடத் தொடங்கிவிட்டார். அவர் அங்கேயே தொடர்ந்து பாடட்டும்’ என்று கூறியதாகவும், இதனால் மனமுடைந்து அழுத தன்னை, அங்கு இருந்த பாடகர் மனோ தேற்றி ஆறுதல் கூறியதாகவும் மின்மினி கூறியுள்ளார். அந்த நிகழ்வுக்குப் பிறகு இளையராஜா தன்னை பாடுவதற்கு அழைக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ‘கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி பாடும் பாட்டு’ பாடலை பாடும் வாய்ப்பை ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு வழங்கியதாகவும் மின்மினி கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *