உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது!

உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்கள் குறித்த அறிக்கை ஒன்றை “The Economist” வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தரவரிசைப் பட்டியல்
அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்குப் பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கெல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7ஆவது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

பட்டியலில் உள்ள முக்கிய நகரங்கள்…

01. வியன்னா – ஒஸ்திரியா

02. கோபன்ஹேகன் – டென்மார்க்

03. மெல்போர்ன் – அவுஸ்திரேலியா

04. சிட்னி – அவுஸ்திரேலியா

05. வென்கூவர் – கனடா

06. சூரிக் – சுவிட்சர்லாந்து

07. கெல்கரி – கனடா

08. ஜெனீவா – சுவிட்சர்லாந்து

09. டொராண்டோ – கனடா

10. ஒசாகா – ஜப்பான் என்பவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *