உலகின் மிகவும் செல்வந்த கிரிக்கெட் வீரரான விராட் கோலி!

உலகின் மிகவும் செல்வந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மாறியுள்ளார்.

அவரின் நிகர சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாவை (இந்திய ரூபாய்) தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய போதிலும், அவரின் வர்த்தக சந்தை மதிப்பு சற்றும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது அவர் அதிக நிகர மதிப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையான பிசிசிஐ இன் மத்திய ஒப்பந்தத்தின்படி, விராட் கோலி ஆண்டு சம்பளமாக ஏழு கோடி ரூபாவை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர அவரது ஒரு போட்டிக்கான டெஸ்ட் போட்டிக்கான 15 லட்சம் ரூபாவும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாவும், இருபதுக்கு இருபது போட்டிக்கு 3 லட்சம் ரூபாவும் பெற்றுக்கொள்கின்றார்.

மேலும், இந்தியன்பிரீமியர் லீக் தொடரில் தனது அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் இருந்து ஆண்டுக்கு 15 கோடி சம்பாதிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ உள்ளிட்ட ஏழு நிறுவங்களில் முதலீட்டாளராகவும் உள்ளார்.

ஒரு விளம்பரத்தின் படப்பிடிப்புக்காக 7.50 முதல் 10 கோடி ரூபாய் வரை விராட் கோலி சம்பளமாக பெற்றுக்கொள்கின்றார்.

விவோ, புளூ ஸ்டார், லக்சர், எச்எஸ்பிசி, உபெர், தூத்சீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்ஆர்எஃப் மற்றும் சின்தோல் உள்ளிட்ட மொத்தம் 26 பெரும் நிறுவங்களின் விளம்பர தூதரகாவும் அவர் செயற்படுகின்றார்.

இதன்மூலம் அவர் ஆண்டுக்கு 175 கோடி ரூபா வருமானமாக பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு 8.9 கோடி ரூபாவும், ட்விட்டரில் ஒரு பதிவுக்கு 2.5 கோடி ரூபாவும் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 இல் தொடங்கப்பட்ட One8 கம்யூன் உணவகம் மற்றும் அதே ஆண்டில் தொடங்கப்பட்ட “Nueva” உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு விராட் கோலி சொந்தகாரராக உள்ளார்.

வ்ரோன் என்ற பெயரில் ஒரு ஆடைச் சங்கிலியை வைத்திருக்கிறார், மேலும் 2016 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான வாழ்க்கை முறை பிராண்டான ஸ்டெபத்லானை அறிமுகப்படுத்தினார்.

டென்னிஸ் அணி, எஃப்சி கோவா கால்பந்து கழகம் மற்றும் மல்யுத்த சார்பு அணியிலும் முதலீடு செய்துள்ளார்.

மேலும் மும்பையில் 34 கோடி ரூபா பெறுமதியான வீடு வைத்திருப்பதுடன், குர்கானில் 80 கோடி ரூபா பெறுமதியில் வீடு ஒன்றை நிர்மாணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *