இந்தியாவின் தோல்விக்கு IPL தொடரே காரணம் டிராவிட் தெரிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடரே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் அவுஸ்திரேலியா அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது.

இதன்படி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றிருந்தது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி
அவுஸ்திரேலியா அணியின் இந்த ஓட்ட குவிப்புடன் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை 50 வீதமாக குறைந்தது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 296 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.

இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 270 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன் மூலம் இந்திய அணிக்கு 444 என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இந்திய அணியால் 234 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்தியாவிற்கு இமாலய வெற்றி இலக்கு
இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ராகுல் டிராவிட், இந்திய அணியின் தோல்விக்கு ஐ.பி.எல் தொடரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.

“இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவிக்க முடியாது. எனினும், இந்திய அணி வீரர்கள் தவறான பந்து வீச்சால் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர்.

அதேபோல் இந்திய அணியின் முன்னணி ஐந்து துடுப்பாட்ட வீரர்களும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் தரத்திற்கு துடுப்பெடுத்தாடவில்லை.

இந்த தொடரில் விளையாட தயாராவதற்கு வீரர்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. ஒரு பயிற்சியாளராக நிச்சயம் அதில் மகிழ்ச்சி இல்லை.

மூன்று வாரங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து வந்து, பயிற்சிப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் ” என டிராவிட் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *