கொழும்பு மாநகர சபைக்கு பல கோடிக்கணக்கான பணம் செலுத்த உள்ள தனியார் நிறுவனங்கள்!

கொழும்பு மாநகர சபைக்குள் வாகன தரிப்பிடங்களை நடத்தும் 38 தனியார் நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு கூடிய போது, ​​2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 265.5 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகரசபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய அரசாங்க கணக்குகள் அல்லது கோபா குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கொழும்பு மாநகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வசூலிக்கப்படாத வருமானம் 6,280 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டில் 5,386.4 மில்லியன் ரூபாவும், 2019ஆம் ஆண்டில் 4,481.5 மில்லியன் ரூபாவும் நிலுவையாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பு மாநகர சபைக்குள் வாகன தரிப்பிடங்களை நடத்தும் 38 தனியார் நிறுவனங்களிடமிருந்து 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 265.5 மில்லியன் ரூபா மாநகரசபைக்கு செலுத்தப்பட வேண்டும்.

இதற்கு மேலதிகமாக மதிப்பீட்டு வரி, வாடகை மற்றும் இதர வரிகள் என மாநகர சபை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *