பேராதனைப் பல்கலைக்கழகத்தின் Jubilee batch பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு!

யடவத்த எம்.சதுர்தீன்)


பேராதனை பல்கலைக்கழகத்தின் 1992 ஆம் கல்வியாண்டு கலைப் பிரிவு (Jubilee batch) பட்டதாரிகளின் 5வது ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் (வூஸ் வளையில்) நடைபெறவுள்ளது.

      கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பேராதனை பல்கலைக்கழகத்தின்  குறித்த கல்வியாண்டின் கலைப் பிரிவு குழுத் தலைவருமான எம்.எம்.ஸாபிர் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மேற்படி பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு நாட்டில் பல துறைகளிலும்  உயர் பதவிகளை வகித்து வருபவர்களும், இதே கல்வியாண்டில் பட்டப்படிப்பை மேற்கொண்டு சமூகத்தில் செயற்படும் தொழில்சார் வல்லுநர்களான பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளும் இந்த ஒன்று கூடலில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

பல்கலைக் கழக பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் இவ் ஒன்று கூடலில் பட்டதாரிகள் மூலம்  சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் இவர்களது பிள்ளைகளின் எதிர்கால கல்வி தொழில்சார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.இதற்கான ஏற்பாடுகளை குறித்த கல்வியாண்டு கலைத் துறை மத்திய பிராந்திய மாணவக் குழுத் தலைவரும் பேராதனை பல்கலைக்கழக அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறை பேராசிரியர் எம்.இஸட்.நபீல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *