சகோதரியின் திருமண நாளில் இறுதிப் பயணம் சென்ற சகோதரன்!

இங்கிரிய பிரதேசத்தில் தனது சகோதரியின் திருமண தினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சகோதரனான 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹந்தபாங்கொட தேசிய பாடசாலையின் தரம் 10இல் கல்வி கற்கும் பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மணப்பெண்ணான சகோதரிக்கு இவர் ஒரே சகோதரன் என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

திருமண நிகழ்வுக்கு மணமகனின் தந்தையுடன் திருமண புகைப்படத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *