கார் ஓட்டும் நபர்கள் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வோம்!

கார் ஓட்ட பழகும் போது பலர் ABC என் விதிமுறையைப் பற்றிச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் பலருக்கு D ஒரு விஷயம் இருப்பது பற்றித் தெரியாது. இது குறித்துத் தான் இங்கே நாம் விரிவாகக் காணப்போகிறோம்.
கார் என்பது இன்று ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஒரு குடும்பத்தினர் வெளியூர்களுக்குச் செல்ல பஸ், ரயில், போன்ற பொது வாகனத்தை விட கார் போன்ற தனிப்பட்ட வாகனத்தைத் தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் கார் ஓட்டி படிக்கவும் தற்போது சிரமம் இல்லை. பல டிரைவிங் ஸ்கூல் இருக்கிறது. அங்கேயே கார் ஓட்டி படித்து லைசென்ஸூம் வாங்க முடியும். இப்படியாக கார் ஓட்டி படிக்கும் போது நமக்குச் சொல்லிக்கொடுக்கும் முதல் விதி, ABC தான். கார் ஓட்ட தெரிந்த எல்லோருக்கும் இது பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இது தெரியாமல் காரை ஓட்டவே முடியாது.
ஆனால் கார் ஓட்ட தெரிந்த பலருக்கும் தெரியாத D என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இதன் பயன்பாடு குறைவு என்பதால் பலர் இதைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதில்லை. இதைப் பலரும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் இது குறித்த தெரிந்து கொண்டால் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
மேனுவல் கார்களை இந்தியர்கள் அதிகம் வாங்க இதுதான் காரணமா… இத்தன நாளா தெரியாம போச்சே! டாப் 5 காரணிகள்… மேனுவல் கார்களை இந்தியர்கள் அதிகம் வாங்க இதுதான் காரணமா… இத்தன நாளா தெரியாம போச்சே! டாப் 5 காரணிகள்…
ABC என்றால் நமக்கு ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச் என்று தெளிவாக தெரியும். ஆக்ஸிலரேட்டர் காரை நகர்த்துவதற்கும், பிரேக் காரை நிறுத்துவதற்கும், கிளட்ச் கியரை மாற்றுவதற்கும் பயன்படும். இதில் AB என்ற ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை நமது வலது காலில் ஆப்ரேட் செய்ய முடியும். இதுவே C என்ற கிளட்சை இடது காலில் ஆப்ரேட் செய்ய முடியும்.
D என்பது டெத் பெடல் எனப்படும் கருவி இது கிளட்ச் பெடலுக்கு அருகே இருக்கும் கருவி பொதுவாக கார் ஓட்டும் போது வலது கால் தான் அதிகமான வேலை செய்யும். ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் என்ற இரண்டையும் இந்த கருவிதான் கையாளும் என்பதால் இடது காலுக்கு வேலை குறைவு, சிட்டி டிராபிக்கில் பயணிக்கும் போது மட்டுமே அதிகம் பயன்படும்.
நீண்ட தூரம் பயணிக்கும் போது கிளட்ச் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்காது. டாப் கியருக்கு சென்று விட்டால் அதன்பின் இடது கால் ரிலாக்ஸ் தான். ஆனால் பலர் அந்த காலை கிளட்ச் மீது வைத்துக்கொண்டே பயணிப்பார்கள். இப்படி கிளட்ச் மீது காரை வைத்துக்கொண்டே பயணிப்பது தவறான பழக்கம். இது வாகனத்தின் பெர்ஃபாமென்ஸை குறைக்கும். இதனால் கிளட்ச்சிக்கு அருகில் டெல் பெடல் சில கார்களில் இருக்கும்.
இதில் கிளட்ச் பயன்படாத போது காலை வைத்துக்கொள்ளலாம். இது எந்த வித விளைவையும் ஏற்படுத்தாது. காலுக்கு ஒரு சப்போர்ட்டாக இருக்கும். பலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. சிலர் வேறு ஏதோ பிளாஸ்டிக் பகுதி என நினைத்துக்கொள்வார்கள். இதனால் நீங்கள் இப்படி காரில் பயணிக்கும் போது நீண்ட தூரம் பயணித்தால் இந்த டெத் பெடலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.