பண்டாரவளையில் புதிய தோற்றத்தில் Fashion Bug

இலங்கையின் புகழ்பெற்ற பேஷன் விற்பனையாளரான Fashion Bug மலையக நகரமான பண்டாரவளையில் அமைந்துள்ள அதன் நாடாளாவிய வலையமைப்பின் முதல் விற்பனை நிலையத்தை சீரமைத்து புதுப்பித்துள்ளது. பரந்தளவிலான வாடிக்கையாளர்களை திறம்பட சென்றடையவும், பண்டாரவளைக்கு அருகில் வசிக்கும் தனிநபர்களுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், இல. 136, தர்மவிஜய மாவத்தை, பண்டாரவளையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் 2023 மார்ச் 25 அன்று வைபவ ரீதியாக பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இவ் விற்பனை நிலையம் பிரதம அதிதி கௌரவ. முதன்மைக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களால், ஆணையாளர் தனராஜ் கஜேந்திர குமார, பொலிஸ் அத்தியட்சகர், DMM தசநாயக்க, பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் DM நிஷாந்த குமாரசிறி, இலங்கை நடிகரும் பாடகருமான ரவீன் கனிஷ்க பிரபல விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள், ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையமானது, வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் அதிநவீன ஷொப்பிங் அனுபவத்தை வழங்கக்கூடிய நவீன வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவுள்ள நிபுணர்களின் குழுவைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் பரந்து காணப்படும் உள்ளூர் ஃபேஷன் சில்லறை விற்பனை வணிகம் Fashion Bug பற்றி தனது எண்ணங்களை வெளிப்படுத்திய Fashion Bug இன் தலைமை நிர்வாக அதிகாரி ஷபீர் சுபியன், “Fashion Bug ஒரு பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய வியாபாரக்குறியாகும்,

இது காலப்போக்கில் ஒவ்வொரு வீடுகளிலும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வியாபரக்குறியாக தங்களது பாரம்பரியத்தை பேணுவது முக்கியம் என்றாலும், இளைய சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் மாற்றியமைப்பதும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. முன்னர் 500 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருந்த பண்டாரவளை விற்பனை நிலையம் தற்போது 3,000 சதுர அடிக்கும் அதிகமான விற்பனை இடத்தைக் கொண்டுள்ளது, அங்கு நாங்கள் உன்னதமான சலுகைகளுடன் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் நவநாகரீக ஆடை வகைகளையும் வழங்குகிறோம்,

மேலும் சமீபத்திய பாணிகளுடன் தொடர்ந்து இருக்க முயற்சி செய்கிறோம். தடையற்ற ஷொப்பிங் அனுபவத்திற்காக எங்கள் தயாரிப்புகளை மிகத் தெளிவாக வழங்கும் தளவமைப்புடன், விற்பனையகத்தின் உட்புறத்தை மிகவும் நவீனமயமான ஸ்டைலான உணர்வைப் பெற மறுவடிவமைப்பு செய்துள்ளோம். ” எனக் கூறினார்.

1994, இல் ஏழு பேர் கொண்ட குழுவுடன் பண்டாரவளையில் ஸ்தாபிக்கப்பட்டது, நகரத்தில் 500 சதுர அடி சிறிய இடத்தை ஆக்கிரமித்து அதன் முதல் விற்பனை நிலையம் Fashion Bug, திரு. ரிசால் மற்றும் அஷான் சுபியான் ஆகியோரால் நிறுவப்பட்டது. இன்று இது ஒரு குடும்ப வர்த்தக நாமமாக பரிணமித்துள்ளது, இது நாடு முழுவதும் 14 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, இது பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியது.

Fashion Bug, இலங்கை நுகர்வோருக்கு நிகரற்ற நாகரீக மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை உருவாக்கி, சர்வதேச வர்த்தகநாமங்கள் மற்றும் உலகளாவிய பாணிகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட வர்த்தகநாமங்களை காட்சிப்படுத்துகின்ற இலங்கை பேஷன் சில்லறை வணிகம் என்பதில் பெருமிதம் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *