இலங்கையின் மிக நீளமான பாத யாத்திரை ஆரம்பம்..!

 

இலங்கையின் மிக நீளமான பாத யாத்திரையாக கருதப்படும் யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை நேற்று மாலை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வசாந்தி முருகன் இந்து ஆலயத்தில் இருந்து கதிர்காம கடவுளுக்கு பூஜைகளை செய்வதற்காக ஆரம்பமாகியது.

ஆலய பிரதம குரு தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை யாழ்ப்பாணம் தொண்டமனாறு பிரதேசத்தில் வசிக்கும் பக்தர்கள் குழுவுடன் முல்லைத்தீவு பகுதியில் இருந்து பாதயாத்திரையில் இணைந்த பக்தர்கள் குழுவுடன் பயணித்து வருகின்றது.23 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையானது யாழ்ப்பாணம், கொடிகாமம், புதுக்குடியிருப்பு, கொக்கிளாய், கொக்குதுடுவாய், புல்மூடு, திரியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, உஹன ஊடாக கதிர்காமம் ஆலயம் வரை பயணிக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் கோயிலுக்கு பக்தர்கள் 46 நாட்களுக்கு 600 கிலோமீற்றர் தூரம் பயணித்தனர்.

வழியில், மத வழிபாட்டுத் தலங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சாதாரண மக்களும் வழியில் பக்தர்களுக்கு உணவு, பானம் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *