சூடானில் நிர்க்கதியான மற்றுமொரு குழுவை பாதுகாப்பாக வெளியேற்றியது சவுதி!

சவூதி அரேபிய அரசானது அதன்‌ தலைமைத்துவத்தின்‌ வழிகாட்டுதலின்‌ கீழ்‌,
சூடான்‌ குடியரசில்‌ சிக்‌கித்தவிக்கும்‌ பல்வேறு நாட்டினரையும்‌ வெளியேற்றும்‌
முயற்சியின்‌ தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 14 சவூதி
பிரஜைகளும்‌ மற்றும்‌ அமெரிக்கா, கனடா, தென்சூடான்‌ மற்றும்‌ யமன்‌ போன்ற
நாடுகளைச்‌ சேர்ந்த 206 பேர்களும்‌ செவ்வாய்க்‌வழமை மாலை ஜெத்தா நகரை
வந்தடைந்தனர்‌. அவர்கள்‌ மன்னரின்‌ கப்பலான “ரியாத்‌” மூலம்‌ கொண்டு
வரப்பட்டனர்‌.

அவர்கள்‌ தத்தமது நாடுகளுக்குப்‌ புறப்படுவதற்குத்‌ தயாராகும்‌ வகையில்‌
அவர்களுக்குத்‌ தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்‌ ஏற்படுத்திக்‌
கொடுப்பதில்‌ சவூதி அரேபியா காட்டி வரும்‌ ஆர்வத்‌தைனையும்‌ கெளரவ தூதுவர்‌
அவர்கள்‌ உறுதிப்படுத்தினார்‌.

சூடானில் நிர்க்கதியானவர்களை சவுதி அரசால் வெளியேற்றும் முயற்சிகள்
ஆரம்பிக்கப்பட்டதலிருந்து சூடானில்‌ இருந்து இதுவரை மொத்தமாக 102
நாடுகளைச்‌ சேர்ந்த 5629 பேர்‌கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்‌. (239 சவூதி
பிரஜைகள்‌ மற்றும்‌ 5390 பேர்‌ ஏனைய நாடுகளைச்‌ சேர்ந்தவர்கள்‌).

காலித்‌ ஹமூத்‌ அல்கஹ்தானி
இலங்கைக்‌ குடியரசக்கான சவூதி அரேபிய தூதுவர்‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *