சவுதி அரசின் உதவியுடன் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை குழுவினர்!

சவுதி அரேபியாவின் உதவியுடன் சூடானில் இருந்து மற்றுமொரு இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட 212 பேரில் இந்தக் குழுவும் உள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலிட் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்டவர்கள் நேற்று (01) மாலை சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரை வந்தடைந்ததாக தூதுவர் காலிட் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.

சவுதி அரேபிய அரச தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வெளியேற்றங்கள் நடத்தப்படுகின்றன.

நேற்று வெளியேற்றப்பட்ட குழுவில் 41 சவுதி குடிமக்கள் மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொமொரோஸ், உக்ரைன், மடகாஸ்கர், இங்கிலாந்து, சிரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 171 பேர் இருந்தனர்.

அவர்கள் சவூதி மன்னருக்கு சொந்தமான “அபா” ககப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் இதில் 225 சவுதி குடிமக்கள் மற்றும் 102 நாடுகளைச் சேர்ந்த 5184 நபர்களை உள்ளடக்கிய சுமார் 5409 பேர்களை சூடானில் இருந்து பாதுகாப்பாக சவுதி அரேபியா அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

சவுதி அரேபிய இராச்சியம் அவர்கள் தங்கள் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு வசதியாகத் தேவையான அனைத்துத் தேவைகளையும் வழங்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 15 அன்று சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்த சண்டையில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வெளியேற்றங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *