உலகின் முதல் அல்ட்ரா ஹை-ஸ்பீட் 6G!ஐ அறிமுகப்படுத்தியது சீனா!i

 

சீன ஆராய்ச்சியாளர்கள் 6G வழியாக உலகின் முதல் அல்ட்ரா ஹை-ஸ்பீட் கம்யூனிகேஷன் தகவல்தொடர்பை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை இப்படி ஒரு அதிவேக இணைப்பை வேற எந்த உலக நாடுகளும் இன்னும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சீனாவின் கரங்கள் இப்போது இதை கைப்பற்றிவிட்டது.

இப்போது பூமியில் பயன்படுத்தப்படும் அதிவேக நெட்வொர்க் அமைப்பாக 5ஜி திகழ்கிறது. சில நாடுகளில் 6ஜி துவங்கும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. இப்படி இருக்கும் தருணத்தில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில், சீனா ஒரு புதிய அசாதாரணமான விஷயத்தை செய்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து உலகின் மிகவும் வேகமான தகவல்தொடர்பை உருவாக்கியுள்ளனர்.

64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் புதிய POCO 5ஜி போன்.!64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் புதிய POCO 5ஜி போன்.!

இது விரைவில் செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையிலான தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுமாம். சீன ஆராய்ச்சியாளர்கள் குழு 6G தொழில்நுட்பத்தின் முதல் நிகழ்நேர வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மூலம் அல்ட்ரா ஹை-ஸ்பீட் தகவல்தொடர்பு அம்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின், இரண்டாவது இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சிக் குழு டெராஹெர்ட்ஸ் ஆர்பிட்டல் ஆங்குலர் மொமெண்டம் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.புதிய 6ஜி மொபைல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பமானது தற்போதுள்ள 5ஜி சேவைகளை விட 10-20 மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. தெராஹெர்ட்ஸ் (Terahertz ) என்பது எலெக்ட்ரோமேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரத்தில் 100 GHz மற்றும் 10 THz வரையிலான அதிர்வெண் வரம்பைக் குறிக்கிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சோதனையில், குழு 110 GHz அதிர்வெண்ணில் நான்கு வெவ்வேறு பீம் வடிவங்களை உருவாக்க ஒரு சிறப்பு ஆண்டெனாவைப் பயன்படுத்தியுள்ளது. அந்த வடிவங்கள் மூலம், 10 GHz அலைவரிசையில் வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் நிகழ்நேர வயர்லெஸ் டிரான்ஸ்மிஷனை அவர்கள் அடைந்துள்ளனர். இது அலைவரிசை பயன்பாட்டின் செயல்திறனை கணிசமாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில், இந்த அல்ட்ரா ஹை-ஸ்பீட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பம், குறுகிய தூர பிராட்பேண்ட் டிரான்ஸ்மிஷன் துறைகளிலும் பயன்படுத்தப்படுமாம். அதேவேளையில், இந்த அதிவேக இணைப்பு நெட்வொர்க் சந்திரன் மற்றும் செவ்வாய் லேண்டர்கள், விண்கலம் மற்றும் விண்கலங்களுக்கு இடையேயான அதிவேக தகவல்தொடர்புகளை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படும் என்று ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.

அதிக அதிர்வெண் காரணமாக, டெராஹெர்ட்ஸ் தகவல்தொடர்பு அதிக தகவல்களை எடுத்துச் செல்ல முடியும் மற்றும் விரைவான தரவு பரிமாற்ற விகிதங்களை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 6G தகவல்தொடர்பு, அதிவேக இணையம் மற்றும் சிக்கலான இராணுவச் சூழல்கள் போன்ற பாதுகாப்பான தகவல்தொடர்புகளில் அதன் ஆற்றலுக்காக இது குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.எதிர்காலத்தில், 6G ஐப் பயன்படுத்தும் உச்ச தொடர்பு வேகம் ஒரு வினாடிக்கு ஒரு டெராபிட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 1 தெராபைட் என்பது 1024 ஜிபி டேட்டாவை குறிக்கிறது. வினாடிக்கு 1024 ஜிபி டேட்டா இந்த அல்ட்ரா ஹை-ஸ்பீட் கம்யூனிகேஷன் லைன் மூலம் எளிதாக அடைய முடியும் என்று கூறப்படுகிறது. சீனா சமீபத்தில் மிகவும் ஆக்டிவாக பல புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *