உலக புவி தினக் கொண்டாட்டம் – 2023

 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் உலக புவி தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுகின்றனர். உலக புவி தினக் கொண்டாட்டம் முதல் முறையாக அரம்பமானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவிலாகும். ஐரோப்பிய மக்களினால் மேற்கொள்ளப்பட்ட அதிக வளப் பயன்பாடு காரணமாக ஏற்பட்ட வளி மாசு மற்றும் நீர் மாசு காரணமாக மனித சுகாதாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கு மக்களை தூண்டுவதே இதற்குக் காரணமாக இருந்தது.

உலக புவி தின அமைப்பினால் இம்முறை உலக புவி தினத்தின் தொனிப்பொருளாக, “எமது பூமியில் முதலீடு செய்வோம்”(Invest in our Planet) என்பதை அறிவித்துள்ளனர். அதன்படி, எதிர்கால சந்ததிகளின் தேவைக்காக இயற்கை வளங்களை சேமிக்கும் வகையில் பேண்தகு முறையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு உலக புவி தின கொண்டாட்டத்திற்கான விழா ஒன்று 2023.04.24ஆம் திகதி கௌரவ சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்கள் மற்றும் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் 8அவது மாடியில் உள்ள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கொண்டாட்ட நிகழ்ச்சி அறிவூட்டும் செயலமர்வு வடிவத்தில் செயற்பட்டதோடு அதற்காக 75 பாடசாலை மாணவர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்பட 178 பேர் அளவானோர் பங்கேற்றனர்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்கள் புவி தின வரலாறு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை விளக்கினார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் இவ்வாறான சுற்றாடல் தொடர்பிலான தினம் குறித்து அடிமட்டத்தில் இருந்து மக்களை அறிவூட்டும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அதன்மூலம் சுற்றாடல் தொடர்பில் உணர்வுபூர்வமான மக்களை உருவாக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அறிவூட்டுவதற்காக 02 விரிவுரைகள் நடத்தப்பட்டன. புவி தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் செயற்படும் ஒன்றிணைந்த நீர் மூல மற்றும் நீர் வள முகாமைத்துவ திட்டத்தின் சுற்றாடல் நிபுணர் டீ.எம். அனுருத்த தென்னகோன் அவர்களினால் முதல் விரிவுரை நடத்தப்பட்டதோடு காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமாதல் தொடர்பிலான இரண்டாவது விரிவுரையை ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணர், கலாநிதி ஜகத்தேவ விதானகமகே அவர்களினால் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களுக்காக சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்கள் உள்ளடங்கிய புத்தக தொகுதிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *