தல தோனி – நடிகை குஷ்பூ திடீர் சந்திப்பு!

தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகை குஷ்பூ நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான குஷ்பு தன் குடும்பத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியை சந்தித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை. அவர்கள் பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். எங்கள் CSK கேப்டனுக்காக நான் என் வார்த்தைகளை இழக்கிறேன். என் மாமியாரை சந்தித்தார். 88 வயதில் இருக்கும் என் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அவர் ஹீரோ தோனியை வணங்குகிறார். மஹி, நீ பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வாழ வேண்டும். என் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்