பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்.!”

 

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும்
பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனியை பதப்படுத்துவதினால் கிடைப்பது பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி ஆகும். இதில் பனங்கற்கண்டின் மகத்தான மருத்துவ பயன்களை பார்ப்போம்.

பாங்கற்கண்டு பெரும்பாலான கடைகள் மற்றும் நாட்டு மருத்துவக் கடைகளில் தாராளமாக கிடைக்கும்.

இதில் சுண்ணாப்பு சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), சாம்பல், புரதச்சத்துக்கள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் (ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும். பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. உடலுக்கு தேவையான வெப்பத்தை தக்கவைத்து கொள்கிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. ஒரு டீஸ்பூன் சிறியவெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும். சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து தின்றுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.

சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பங்கற்கண்டே மேலானது.
கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.
இப்படி எண்ணற்ற பலன்களை அள்ளித் தரும் பனை மரங்களை பாதுகாப்பது நமது கடமையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *